குழந்தைகளுக்கு சொக்லேட் என்றால் கொள்ளைப்பிரியம். அதே சொக்லேட்டை இனி பெரியவர்களும் விருப்பமுடன் சாப்பிடலாம். சொக்லேட் சாப்பிடுவது இதய நோய் வருவதை தடுப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம் தாக்குவதையும் தவிர்க்கிறதாம். ஆனால் இந்த சொக்லேட்டில் 60 சதவீதம் கொக்கோ அடங்கி இருக்க வேண்டும்.
உலக அளவில் மனித உயிரிழப்பில் இதய நோய்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தான் அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் விஞ்ஞானிகள் இது தொடர்பான ஒரு ஆராய்ச்சியை நடத்தி வந்தனர்.
சொக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவிற்குத் தான் இதய நோயைத் தடுக்கிற ஆற்றல் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே குழந்தைகளைப் போன்று பெரியவர்களும் சொக்லேட் சாப்பிடலாம். இதய நோயை தடுத்திடலாம்.