22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Fennel Lemon Tea
எடை குறைய

உடல் எடையை குறைக்கும் பெருஞ்சீரக லெமன் டீ

உடல் எடை குறைய, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் பெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் பெருஞ்சீரக லெமன் டீ
தேவையான பொருட்கள் :

டீத்தூள் – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்
தேன் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

* பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

* ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.

* வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

பயன்கள் :

எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது. மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும். தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.Fennel Lemon Tea

Related posts

48 மணிநேரத்தில் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இந்த வழிய ஃபாலோ பண்ணுங்க…

nathan

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

nathan

வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறைய இதை 3 நாட்கள் தொடர்ந்து குடிங்க..!!சூப்பர் டிப்ஸ்….

nathan

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

nathan

உடல் எடையை குறைக்கும் வரகரசி – கொள்ளு அடை

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்!

nathan

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்

nathan

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க…

nathan