31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

உடல் எடையை குறைக்கும் பெருஞ்சீரக லெமன் டீ

உடல் எடை குறைய, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் பெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் பெருஞ்சீரக லெமன் டீ
தேவையான பொருட்கள் :

டீத்தூள் – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்
தேன் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

* பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

* ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.

* வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

பயன்கள் :

எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது. மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும். தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Related posts

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க.

nathan

இடுப்பும் வயிறும் இன்னும் முக்கியம்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்ட சில எடை இழப்பு குறிப்புகள்!

nathan

உடல் எடையில் அபார மாற்றத்தைக் காண்பீர்கள் இதைக் குடித்துப் பாருங்கள்.

nathan

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

nathan

அழகை பதிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி

nathan

செலவே இல்லாமல் அதிகரித்த எடையை குறைக்க….

sangika

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் கொள்ளு

nathan

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​ #GoodHealth

nathan