28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201610140750569945 hoe to make Beetroot halwa SECVPF
இனிப்பு வகைகள்

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா

பீட்ரூட் அல்வா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 1/2 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
பால் – 200 மி.லி.
நெய் – 100 கிராம்
ஏலக்காய்ப்பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 10
கிஸ்மிஸ் – 10
பாதாம் – 10

செய்முறை :

* பீட்ரூட்டின் தோலை சீவி துருவிக் கொள்ளவும்.

* பாதாமை துருவிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து முந்திரி, கிஸ்மிஸ் முதலியவற்றை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பின்னர் அதே நெய்யில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர் பாலையும், சீனியையும் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* இடையிடையே சிறிது சிறிதாக நெய்யைச் சேர்க்கவும்.

* பீட்ரூட் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது ஏலக்காய்ப்பொடி, முந்திரி, கிஸ்மிஸ், பாதாம் சேர்த்து கிளறி இறக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.201610140750569945 hoe to make Beetroot halwa SECVPF

Related posts

கருப்பட்டி வட்டிலப்பம்/ Jaggery Wattalappam recipe in tamil

nathan

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு

nathan

சாக்லெட் மான்ட் ப்ளாங்க் (ஃபிரான்ஸ்- ஜெர்மனி)

nathan

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

nathan

கோதுமை அல்வா

nathan

ஹயக்ரீவ பண்டி

nathan

அன்னாசி – வெந்தயப் பணியாரம்

nathan

ரவா பர்ஃபி

nathan

முட்டை வட்லாப்பம்

nathan