30.8 C
Chennai
Wednesday, Jul 2, 2025
oil
ஆரோக்கிய உணவு

சமையலுக்கு சூரிய காந்தி எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாமா?

உடலுக்கு எந்த விதமான எண்ணெய் ஒத்துப் போகும் என்பதை கவனித்து வாங்கி உபயோகிக்க வேண்டும். பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது.
இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது. சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன், லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், சூரிய காந்தி எண்ணெயால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரிய காந்தி எண்ணெயுடன் கலந்தோ அல்லது ஒரு நாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிக்கப்பதும் நல்லது.
பொதுவாகவே, எந்த வொரு எண்ணெயாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது ஆலிவ் ஆயில், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.oil

Related posts

வாழைப்பழ மோர் குழம்பு

nathan

சுவையான உடலுக்கு வலுசேர்க்கும் மாதுளை – பீட்ரூட் சூப்..

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தையுடன் பயணிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய வீட்டு உணவுகள்!!!

nathan

நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்!

nathan

தயிரின் அற்புதங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு

nathan

தெரிஞ்சிக்கங்க…பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சோர்வை போக்க காலை உணவு அவசியம்

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan