மைதா மாவு :
இன்று எல்லா உணவுப்பொருட்களிலுமே கலர்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்பளங்களே பலவண்ணங்களில் வருகின்றன. இப்படிப்பட்ட கலர்கள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவைதான். இவற்றை தவிர்த்தலே நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
கலப்படம்: மைதா மாவில் அதிகளவில் கலக்கப்படுவது, மரவள்ளிக்கிழங்குத்தூள். இது அதிக வெளிர் நிறத்தை மாவுக்குக் கொடுக்கும்.
கண்டறிதல்: மைதா மாவில் இழுவைக்கான எலாஸ்டிக் தன்மை இருக்கும். இதுவே கலப்பட மைதாவாக இருந்தால், உதிரி உதிரியாக இருப்பதுடன் இழுவைத் தன்மையின்றி இருக்கும்.
தனியா (கொத்தமல்லி) :
கலப்படம்: பளபளப்புக்காக தனியாவில், சல்ஃபர் டை ஆக்சைடு (sulphur dioxide) பயன்படுத்தப்படுகிறது.
கண்டறிதல்: வெண்மையாக இருந்தால் அது கலப்பட தனியா. கறுப்பு தனியாதான் எப்போதும் சிறந்தது.
இவை தவிர, எண்ணெயின் கலப்படத்தை லேப்களில் மட்டுமே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. கல் உப்பை பயன்படுத்தும்போது, அதை டம்ளர் தண்ணீரில் போட, கசடுகள் அடியில் தேங்கும். மேலே இருக்கும் தெளிந்த நீரை, உப்பு தேவைக்குப் பயன்படுத்தலாம்!”

Related posts
Click to comment