4 13 1465805503
முகப் பராமரிப்பு

முகப்பருக்களை விரட்டும் தக்காளியின் மகிமை!

செக்கச் செவேல் என்று இருக்கும் தக்காளிக்கு நிறம் கொடுப்பது லைகோபீன் என்ற நிறமிதான். இந்த நிறமி ஒரு முழுமையான ஆன்டி ஆக்ஸிடென்ட் கூட.

தக்காளியில் நிறைய விட்டமின்கள், மினரல்கள் உள்ளது. தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு செல்களை அழிக்கும்.

தக்காளியின் அதே குணம் முகத்திற்கு அழகையும் சேர்க்கிறது. முகத்தில் இருக்கு சுருக்கங்களைப் போக்கும். நிறத்தினை கூட்டும். முகப்பருக்களை விரட்டும் என தக்காளியின் குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது தக்காளி ஃபேஸ் பேக் உபயோகித்து, முகப்பருக்களை எப்படி போக்கச் செய்யலாம் என்று பார்ப்போம்.

தக்காளியில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி சருமத்திற்கு ஊட்டம் அளிக்கும். அதிகப்படியான எண்ணெயை நீக்கும். ஆழ்ந்து ஊடுருவி, சருமத் துளைகளில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றும்.

தக்காளி பேக் : முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வழிந்தால், வெறும் தக்காளியின் சதைபகுதியை எடுத்து, நன்றாக மசியுங்கள். பின் அதனுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேயுங்கள். 10 நிமிடங்கள் கழித்து பார்த்தால், உங்கள் முகம் பெற்றிருக்கும் மேஜிக் பார்த்து நீங்களே வியந்து போவீர்கள்.

தக்காளி அவகாடோ மாஸ்க் : அவகாடோவில் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளது. இந்த இரண்டும் கலந்து முகத்திற்கு பளபளப்பையும், முகப்பரு இல்லாத தூய்மையான சருமத்தையும் தரும். அவகாடோ மற்றும் தக்காளியின் சதைபகுதியை எடுத்து, நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இவற்றை முகத்தில் தேய்த்து காய விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். முகப்பருக்கள் நீங்க இது அருமையான பலனை தரும்.

தக்காளி யோகார்ட் கலவை : தக்காளி சதைப் பகுதியுடன் சிறிது யோகார்ட் கலந்து முகத்தில் தேய்க்கவும். காய்ந்ததும் கழுவலாம். இது முகப்பருக்களுக்கு மட்டுமல்ல, சரும எரிச்சல், அலர்ஜி ஆகியவௌகளுக்கும் நல்ல நிவாரணம் தரும்.

உங்களுக்கு நேரம் மிகக் குறைவாக இருந்தால், மிக எளிதான இந்த முறையை பின்பற்றுங்கள். தக்காளியை வட்ட வடிவமாக அறிந்து, முகத்தில் வட்ட வடிவில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவலாம். இது முகப்பருக்களை விரட்ட சிறந்த எளிமையான வழி.

வறண்ட சருமம் உள்ளவர்கள் வெறும் தக்காளியை பயன்படுத்தக் கூடாது. இன்னும் வறட்சியை கொடுத்துவிடும். சுருக்கங்களும் ஏற்படும். தக்காளியுடன் தேன் சேர்த்துக் கொண்டால் அற்புதமான டோனராக வறண்ட சருமத்திற்கு பயன்படும்.

4 13 1465805503

Related posts

சீழ் நிறைந்த பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!

nathan

ஏன் உங்களின் கண்ணிமை முடிகள் உதிர்கின்றன? அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

முகத்தை அழகாக்கும் தக்காளி! சூப்பர் டிப்ஸ்…..

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan

சுருக்கம் வேண்டாம்; பளபளப்பு வேணும்!

nathan

பேக்கிங் சோடாவை கண்களைச் சுற்றி தடவுவதால் ஏற்படும் அற்புதங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika