27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
201609200720557855 paneer sweet poli SECVPF
சிற்றுண்டி வகைகள்

பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி

பன்னீர் போளி மிகவும் சுவையாக இருக்கும். பன்னீர் வைத்து போளி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மைதா – ஒரு கோப்பை
கோதுமை மாவு – ஒரு கோப்பை
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
உப்புத்துள் – ஒரு சிட்டிகை
துருவிய பன்னீர் – முக்கால் கோப்பை
துருவிய தேங்காய் – அரைகோப்பை
வெல்லம் – 1/2 கோப்பை
ஏலக்காய் – நான்கு
பொடித்த முந்திரி – தேவைக்கு
நெய்/எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* மிக்ஸியில் வெல்லத்துடன் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னீரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும்.

* பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ்சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பன்னீரில் கொட்டி கலக்கவும்.

* பின்பு அதில் பொடித்த வெல்லம் மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்.

* பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி இலேசாக அழுத்தி மீண்டும் தேய்த்து வைக்கவும்.

* இவ்வாறு அனைத்து மாவையும் போளியாக இட்டு வைக்கவும்.

* தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்து தீயாமல் சுட்டெடுக்கவும்.

* பன்னீர் இனிப்பு போளி ரெடி.201609200720557855 paneer sweet poli SECVPF

Related posts

சுவையான பிரட் வடை தயார்

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

nathan

தந்தூரி பேபி கார்ன்

nathan

முட்டை பணியாரம்!

nathan

கேழ்வரகு – சிறுதானிய குணுக்கு

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்

nathan

தினை இடியாப்பம்

nathan

அகத்திக்கீரை சொதி

nathan