30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அசைவ வகைகள்

மூளை பொரியல் செய்வது எப்படி

மட்டன் மூளை சாப்பிட சுவையாக இருக்கும். இப்போது மட்டன் மூளை பொரியல் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

மூளை பொரியல் செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

ஆட்டு மூளை – 2
மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1 பெரியது
சோம்பு – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.

* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

* 5 நிமிடம் கழித்து நன்றாக சிவந்தவுடன் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.

Related posts

சுவையான மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop

nathan

மட்டன் பிரியாணி

nathan

மட்டன் கடாய்

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல்

nathan

காரசாரமான… குட்டநாடன் மீன் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

மட்டன் க்ரீன் கறி… காரம் தூக்கல்… ருசி அதைவிட தூக்கல்!

nathan

ஸ்பெஷல் பிரியாணி!!

nathan