அசைவ வகைகள்

காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி

கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது.

காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரைக்கிலோ
சின்னவெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2
மிளகுதூள் – 4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 3 டீஸ்பூன்
தேங்காய்பால் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை சிறிதளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை :

* சிக்கனை பொடியாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிய பின்னர் அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேகவிடவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

* இதோடு வரமிளகாயை கிள்ளிப்போடவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

* சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

* சிக்கன் ஊறவைத்ததால் வேகமாக வெந்துவிடும்.

* சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும். ஸ்டவ்வை மிதமாக எரியவிடவும்.

* சிக்கன் கிரேவி பதத்திற்கு வந்த உடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

* மிளகு தேங்காய்பால் கிரேவி தயார்.

* சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளும் நன்றாக சாப்பிடுவார்கள்.201606021413541708 how to make spicy pepper coconut chicken gravy SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button