29.1 C
Chennai
Friday, Aug 15, 2025
201705111529053607 Potato egg poriyal aloo egg poriyal Potato egg fry SECVPF
சைவம்

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்

சப்பாத்தி, பூரிக்கும் தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியல். இன்று இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியலை செய்முறையை பார்க்கலாம்.

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்
தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
முட்டை – 4
கொத்தமல்லி – சிறிதளவு
உருளைக்கிழக்கு – 2
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

தாளிக்க :

சீரகம் – கால் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை.

201705111529053607 Potato egg poriyal aloo egg poriyal Potato egg fry SECVPF
செய்முறை :

* தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். உருளைக்கிழங்கு வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும்.

* உருளைக்கிழங்கு வெந்ததும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

* முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பொரியல் ரெடி.

Related posts

உருளைக்கிழங்கு பனீர் குருமா

nathan

நாக்கில் எச்சில் ஊறும் அருமையான பூண்டு குழம்பு செய்ய வேண்டுமா…?

nathan

சிம்பிளான… சுரைக்காய் குருமா

nathan

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

nathan

பூண்டு – மிளகுக் குழம்பு

nathan

சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்

nathan

வெல்ல சேவை

nathan

சுண்டைக்காய் குழம்பு

nathan

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா….

nathan