27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
yUszkUZ
ஆரோக்கிய உணவு

கல்லீரலுக்கு பலம் தரும் அரைக்கீரை

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அரைக்கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். அரைக்கீரை வாதம், பித்தத்தை சமன்படுத்துகிறது. அரைக்கீரை உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதால், உஷ்ணத்தை குறைப்பதற்காக மருந்து சாப்பிடுபவர்கள் தவிர்க்க வேண்டும். நோய் தீர்க்கும் மருந்தாக விளங்கும் அரைக்கீரை வயது முதிர்வை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இந்த கீரையில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் நச்சுக்கள் வெளியேறும். அரைக்கீரையை பயன்படுத்தி காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரைக்கீரை, மஞ்சள், சுக்கு, மிளகு, உப்பு. ஒரு பாத்திரத்தில் 30 மில்லி அளவுக்கு அரைக்கீரை சாறு எடுக்கவும். இதனுடன் சம அளவு நீர்விடவும்.

கால் ஸ்பூன் மஞ்சள்பொடி, சிறிது சுக்குப்பொடி, மிளகுப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை காலை, மாலை எடுத்துவர நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். காய்ச்சல், உடல் வலி குணமாகும். சுவாச நாளங்கள் சீராக செயல்படும். அரைக்கீரையை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்துவது, முடி உதிர்வதை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரைக்கீரை, சீரகம், எலுமிச்சை, தேன். 20 முதல் 30 மில்லி அரைக்கீரை சாறு எடுத்து சம அளவு நீர்விடவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், சிறிது எலுமிச்சை சாறு, தேன் விட்டு கலந்து குடித்துவர கல்லீரல் பலப்படும். அற்புதமான உணவாக விளங்கும் அரைக்கீரை கல்லீரலுக்கு மருந்தாகிறது. மண்ணீரல் வீக்கத்தை வற்றிப்போக செய்கிறது. டைபாய்டு காய்ச்சல், சளியை போக்க கூடிய தன்மை கொண்டது.

அரைக்கீரையை கொண்டு தோலில் ஏற்படும் படை, தேமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரைக்கீரை, எலுமிச்சை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். ஒரு ஸ்பூன் அளவுக்கு அரைக்கீரை பசையுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிக்கட்டி மேல்பூச்சாக பயன்படுத்துவதால் படை, தேமல், கால் விரல் இடுக்கில் ஏற்படும் சேற்றுப்புண் ஆகியவை குணமாகிறது. தலையில் உள்ள பொடுகு விலகிப்போகும்.

இரும்பு சத்துக்களை உடைய அரைக்கீரை பூஞ்சைகாளான், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. ரத்த சோகையை போக்குகிறது. இதை பயன்படுத்தி வந்தால் உடல் நலம்பெறும். வாயுதொல்லையை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வாயு தொல்லையால் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ஏற்படும். வாயு பிரச்னைக்கு ஓமம் அற்புதமான மருந்தாகிறது. அரை ஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் நீரில் இட்டு காய்ச்சி சிறிது உப்பிட்டு குடித்தால் வாயு தொல்லை நீங்கும். உடல் வலி விலகிப்போகும். yUszkUZ

Related posts

கோபாலமின் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் பி12

nathan

சூப்பர் டிப்ஸ்! பாதாமை ஊறவைத்து சாப்பிடலாமா.?!

nathan

மணத்தக்காளி கடைசல்

nathan

எங்க போனாலும் டமால், டுமீல்’ன்னு வெடிக்கிறீங்களா!! அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

kattu yanam rice benefits in tamil – காட்டு யாணம் அரிசியின் நன்மைகள்

nathan

தினமும் தயிர் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்த பழம் எது?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan