25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201609071247099891 Ayurvedic tips to give solution to the problem LEUCORRHEA SECVPF
மருத்துவ குறிப்பு

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத குறிப்புகள்

வெள்ளைப்படுதல் பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு ஆயுர்வேதத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத குறிப்புகள்
வெள்ளைப்படுதல் பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிப்பார்கள். ஆனால் இந்த வெள்ளைப்படுதல் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் இருந்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் இனப்பெருக்க உறுப்பே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும்.

வெள்ளைப்படுதல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வெள்ளைப்படுதலுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், மோசமான டயட், இரும்புச்சத்துக் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் ஒருசில தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

அமரந்த் என்னும் கீரை வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கீரையில் ஆன்டி-பயாடிக் பொருட்கள் அதிகம் உள்ளதால், இது வெள்ளைப்படுதலை சரிசெய்வதோடு, இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் பருக வேண்டும். இப்படி செய்வதால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காய் உடலில் உள்ள கபத்தைக் குறைக்க உதவுகிறது. உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, மோருடன் கலந்து தினமும் இருவேளை பருகி வர நல்ல பலன் கிடைக்கும். இல்லையெனில் நெல்லிக்காய் பொடியை தேன் சேர்த்து கலந்து தினமும் இருவேளை எடுத்து வரலாம்.

வெந்தம் கூட பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

வாழைப்பழத்தில் வெள்ளைப்படுதலுக்கும் இது ஓர் நல்ல நிவாரணியாகும். பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், வெள்ளைப்படுதலில் இருந்து விடுபடலாம். வேண்டுமானால் வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தினமும் உட்கொண்டு வந்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.201609071247099891 Ayurvedic tips to give solution to the problem LEUCORRHEA SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!

nathan

குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடாதீர்கள்

nathan

மருத்துவர்களின் எச்சரிக்கை! சி.டி ஸ்கேன் வேண்டாம்! இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan

வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!

nathan

நீங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அல்சருக்கான அறிகுறிகள்!!!

nathan

உன்னை அறிந்தால் நீதான் கில்லி!

nathan

டெங்கு கொசுவிடமிருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்!

nathan

பருவ வயது குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan