32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
மருத்துவ குறிப்பு

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத குறிப்புகள்

வெள்ளைப்படுதல் பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு ஆயுர்வேதத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத குறிப்புகள்
வெள்ளைப்படுதல் பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிப்பார்கள். ஆனால் இந்த வெள்ளைப்படுதல் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் இருந்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் இனப்பெருக்க உறுப்பே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும்.

வெள்ளைப்படுதல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வெள்ளைப்படுதலுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், மோசமான டயட், இரும்புச்சத்துக் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் ஒருசில தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

அமரந்த் என்னும் கீரை வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கீரையில் ஆன்டி-பயாடிக் பொருட்கள் அதிகம் உள்ளதால், இது வெள்ளைப்படுதலை சரிசெய்வதோடு, இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் பருக வேண்டும். இப்படி செய்வதால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காய் உடலில் உள்ள கபத்தைக் குறைக்க உதவுகிறது. உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, மோருடன் கலந்து தினமும் இருவேளை பருகி வர நல்ல பலன் கிடைக்கும். இல்லையெனில் நெல்லிக்காய் பொடியை தேன் சேர்த்து கலந்து தினமும் இருவேளை எடுத்து வரலாம்.

வெந்தம் கூட பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

வாழைப்பழத்தில் வெள்ளைப்படுதலுக்கும் இது ஓர் நல்ல நிவாரணியாகும். பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், வெள்ளைப்படுதலில் இருந்து விடுபடலாம். வேண்டுமானால் வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தினமும் உட்கொண்டு வந்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.

Related posts

மார்பக புற்றுநோய்-

nathan

பெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்

nathan

கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்

nathan

இந்த எண்ணெய்களைக் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெரிதாகும் என்பது தெரியுமா?

nathan

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது உங்களுக்கு தான்; 9 காரணங்கள்

nathan

சர்க்கரை நோயை தடுப்பதற்கான சில எளிய டிப்ஸ்…

nathan

வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர்

nathan

முதலுதவிகள்… முத்தான அறிவுரைகள்! ஒரு டஜன் யோசனைகள்!

nathan