எடை குறைய

தொளதொளவென தொங்கும் சதையை, இறுக்கமாக ஆக்குவதற்கான வழிகள்!!!

பிரசவம் முடிந்த பிறகு பெரும்பாலான் பெண்களுக்கு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக தெரிவார்கள். குண்டாக இருப்பது பிடிக்காத பெண்கள் உடனடியாக உடல் மெலிய வேண்டும் என்றும், உடல் எடையை குறைக்கும் வேலைகளில் ஈடுபடுவர்கள். ஆனால், அவர்களது தோல் தொளதொளவென ஆகிவடும்.

தினமும் அலுவலகம் சென்று வரும் பெண்கள் தான் இந்த பிரச்சனையல் பெரும் அவதிப்படுவார்கள். இதற்கான தீர்வுகள் என்னவென்றும் அவர்களுக்கு தெரியாது. ஆனால், சில வழிகளை நீங்கள் சரியாக பின்பற்றினால் இந்த பிரச்சனைக்கு எளிதாக தீர்வு காண முடியும்…

உடல் எடை குறைக்கும்

முறை பிரசவம் ஏற்பட பிறகு உடல் எடையை குறைக்க நினைக்கும் தாய்மார்கள், கடுமையான முறைகளை பின்பற்றி, உடனடியாக உடல் எடையை குறைக்காமல், மெதுவாக, சீரான முறையில் உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம். ஏனெனில், விரைவாக உடல் எடை குறைக்க முற்படும் போது, சதை அல்லது தோல் லூசாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.

கார்டியோ பயிற்சிகள்

அதே போல, உடல் எடை குறைக்க பயிற்சி செய்பவர்கள், கார்டியோ வகை பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. இது, உங்கள் தொப்பையை குறைக்கவும், தோலை இறுக்கமாக ஆக்கவும் நல்ல முறையில் உதவும். தினமும் 20 நிமிடமாவது இந்த பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

புரதம் நிறைந்த உணவுகள்

பிரசவத்திற்கு பிறகு, தொளதொளவென தொங்கும் தோலை இறுக்கமாக மாற்ற புரதச்சத்து மிகவும் அவசியம். இது, உங்கள் உடலில் இருக்கும் சதையை இறுக்கமாகவும், வலுமையாகவும் மாற்ற உதவும். ஆகையால், இந்த பயிற்சிகளில் ஈடுபடும் போது, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்தக்கொள்ள வேண்டியது அவசியம்.

மசாஜ்

மசாஜ்களில் ஈடுபடுவது நலல் பலனளிக்கும். இது, உங்கள் உடலை இலகுவாக வைத்துக்கொள்ள உதவும், மேனி பழையப்படி அகவும் உதவும். மசாஜ் மற்றும் பயிற்சிகளில் சேர்ந்து ஈடுபடுவது நல்ல பலன் தரும்.

நிறைய நீர் பருக வேண்டும்

பிரசவத்திற்கு பிறகு, சதையை இறுக்கமாக்க விரும்பும் பெண்கள், தினசரி நிறைய தண்ணீர் பருக வேண்டியது அவசியம். இது, உடலில் இருக்கும் நச்சுகளையும், வேண்டாத கொழுப்புகளையும் கரைக்க உதவும்.
14 1436872793 1waystotightenlooseskinafterpregnancy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button