28.5 C
Chennai
Sunday, May 18, 2025
201609061112060206 how to make mochai sundal SECVPF
​பொதுவானவை

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. மொச்சை சுண்டல் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

சுவையான சத்தான மொச்சை சுண்டல்
தேவையான பொருட்கள்

மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – அரை டீஸ்பூன்

பொடி செய்ய :

புதினா – ஒரு கைப் பிடி
ஓமம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு

தாளிக்க :

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை :

* கடாயில் ஓமம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்த பின், புதினா சேர்த்து லேசாக வதக்கி பொடி செய்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும்.

* கடைசியாக வறுத்து அரைத்த பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

* சுவையான சத்தான மொச்சை சுண்டல் ரெடி.201609061112060206 how to make mochai sundal SECVPF

Related posts

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

சிக்கன் ரசம்

nathan

உடலுக்கு வலிமை தரும் வரகு கஞ்சி

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

வெங்காய ரசம்

nathan

தவா பன்னீர் மசாலா

nathan

சூப்பரான எள்ளு சாதம்

nathan

உலக மகளிர் நாள்: எப்போது தொடங்கியது?

nathan

பூண்டு பொடி

nathan