31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

எனது வயது 25 ஆகும். நான் இன்னமும் திருமணம் செய்யவில்லை. எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? இது தொடர்பான ஆலோசனை வழங்கவும்.

நீங்கள் குறிப்பிட்டதைப் போன்ற பிரச்சினை சில திருமணம் செய்யாத பெண்களிலும் காணப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்களில் (Prolacti) என்ற ஹோர்மோன்சுரப்பு அதிகரித்து மகப்பேற்றின்பின்னர் அவர்களின்மார்பகங்களிலிருந்து பால் சுரப்பதானது. அவர்களின் குழந்தையின்போசாக்கிற்கு மிகவும் இன்றியமையாததாகும். எனினும் திருமணம் செய்யாத பெண்களுக்கும் அவர்களின் முலைக்காம்புகளிலிருந்து சிலவேளைகளில் பால் போன்ற அல்லது வேறு நிறமான திரவம் வெளியேறலாம்.

இவ்வாறான பிரச்சினை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பல விதமான குளிசைகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. வயிற்றுப்புண் (அல்ஸர்) நோய்க்குப் பயன்படுத்துகின்ற (Omeprazole) போன்ற குளிசைகள் மற்றும் மனநோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் சில மருந்துகள் போன்றன இதற்கு உதாரணமாகும். கர்ப்பம் தரித்தல், பாலியல் உறவு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிலும் இது ஏற்படலாம்.

பலவகையான ஹோர்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன. தைரொயிட்ஹோர்மோன் குறைவாககரத்தல், மாதவிடாய் பிரச்சினை மற்றும் உடற்பருமனாதலுடன் தொடர்பான சூலகத்தில் சிறு கட்டிகள் ஏற்படுகின்ற நோய் (Poly cystic varian Syndrome) போன்றவை இதற்கு உதாரணங்களாகும். இதேபோல மார்பகத்திலிருந்துபால் சுரப்பதற்கு காரணமான Prolactin ஹோர்மோன் சுரப்பு அதிகமாவதற்கு கபச்சுரப்பியில் இந்த ஹோர்மோன் அதிகம் சுரப்பதும் காரணமாக அமையலாம். கபச்சுரப்பியில் ஏற்படுகின்ற கட்டிகள் (Prolactinoma) இதற்கு உதாரணமாகும். சில வேளைகளில் இக் கட்டிகள் பெரிதாக இருக்கும்போது தலையிடி, பார்வைப் பிரச்சினைகள் போன்றவையும் ஏற்படலாம். இதேபோல வேறு பல வகையான நோய்களும் இப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம்.

எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும் வைத்தியரானவர் தேவைப்படுகின்ற வினாக்களை வினவுவதன் மூலமும் உங்களைப் பரிசோதிப்பதன் மூலமும் இரத்த மற்றும் ஹோர்மோன் பரிசோதனைகள் மூலமும் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து கொள்ளமுடியும்.

இதன் பின்னர் தேவைக்கேற்ப மேலதிக பரிசோதனைகளையும் மேற்கொண்டு சிகிச்சை வழங்க முடியும் இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு யாழ்போதனா வைத்தியசாலையின் அகஞ்சுரக்கும் தொகுதி ஹோர்மோன் சிகிச்சை நிலையத்தை தொடர்பு கொள்ளமுடியும்.

-மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலை

Related posts

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் எளிய கிராமத்து வைத்தியம்

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! இந்த 5 அறிகுறிகளும் உங்களுக்கு இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பகாலத்தில் தோன்றும் வாந்தியை நிறுத்த சில டிப்ஸ்!.

nathan

பரவும் பன்றிக்காய்ச்சல்… தொடரும் பதற்றம்… தீர்வு என்ன?

nathan

உங்க குழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா? அப்ப உடனே இத படிங்க…

nathan

பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

nathan

வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்ல, அழுதாலும் நோய்விட்டு போகும் – எப்படின்னு தெரியுமா???

nathan

‘வைரஸ் காய்ச்சல்’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ்…!

nathan