24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tamilac14
சிற்றுண்டி வகைகள்

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

தேவையான பொருட்கள் :
டோஃபு – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
சோள மாவு – கால் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு :
பூண்டு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை
• பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• டோஃபுவை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
• ஒரு பாத்திரத்தில் டோஃபுவை போட்டு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி, பின் அதில் சோள மாவைத் தூவி பிரட்ட வேண்டும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், டோஃபுவை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
• பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கிய பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
• பிறகு அதில் வதக்கி வைத்துள்ள டோஃபுவை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி இறக்கினால், சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெடி!tamilac14

Related posts

கேழ்வரகு இனிப்பு தோசை

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

பனீர் சாத்தே

nathan

முந்திரி வடை

nathan

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

சத்தான சுவையான பருப்புத் துவையல்

nathan

லெமன் இடியாப்பம்

nathan

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

nathan

சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி

nathan