24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
09 1436434388 3eightgoodsourcesoffatforyou
ஆரோக்கிய உணவு

உடல் நலனை ஊக்குவிக்கும், நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவுகள்!!!

கொழுப்புச்சத்து இருக்கும் உணவுகளை கண்டாலே பலரது நெஞ்சம் பதற ஆரம்பித்துவிடும். ஏனெனில், கொழுப்பு உணவுகள், உடல் எடை அதிகரிக்க செய்யும், உடல் எடை அதிகரித்தால், இதயத்தில் ஆரம்பித்து நீரிழிவு நோய் வரை பல பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம்.

கொழுப்புச்சத்தில் எல்.டி.எல். (L.D.L), எச்.டி.எல் (H.D.L) என இரண்டு வகை உண்டு. இதில் எல்.டி. எல். கொழுப்பு தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பண்புடையது மற்றும் இதயத்திற்கு தீங்கானது. எச்.டி.எல். உடலில் நலத்திற்கு உதவும் கொழுப்பாகும்.

ஆயினும் அதிகப்படியாக உட்கொள்ளும் போது, இவ்விரண்டு கொழுப்புமே உடல் எடையை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி, நீங்கள் அன்றாட உணவில் அளவாக சேர்த்துக்கொள்ள வேண்டிய நல்ல கொழுப்பு சத்து உள்ள உணவுகளை பற்றி இனிக் காணலாம்…

நெய்

காலம் காலமாக நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவாக இருந்து வருகிறது. தினமும் சிறிதளவு நெய் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் உடலுக்கு நல்லது. ஆனால், அது சுத்தமான நெய்யாக இருக்க வேண்டும். கடையில் விற்கப்படும் பல நெய்கள் டால்டா கலந்து தயாரிக்கின்றனர்.

ஆலிவ் எண்ணெய்

கொழுப்பில் மற்றொரு நல்ல உணவுப் பொருளாக இருப்பது ஆலிவ் எண்ணெய். இது, உங்கள் உடல் எடை குறைப்பதற்கும் கூட ஓர் நல்ல மாற்று உணவு என்று கூறப்படுகிறது. உடல் எடை குறைக்க விரும்புவோர் மற்ற எண்ணெய்களை விட ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து உள்ள மீன்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இது இதய பிரச்சனை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களும் கூட ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து இருக்கும் மீனை சாப்பிடலாம்.

ஆளிவிதைகள்

ஒருவேளை நீங்கள் மீன் அல்லது அசைவ உணவை வெறுக்கும் நபராக இருந்தால், அதற்கான சிறந்த மாற்று உணவு ஆளிவிதைகள். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை ஆளிதைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் நிலையில் நல்ல மாற்றம் காணலாம்.

நட்ஸ்

கொழுப்பு அதிகமாக இருந்தாலும், உங்கள் இதயத்திற்கும் நன்மை விளைவிக்கும் உணவொன்று இருக்கிறது என்றால் அது நட்ஸ் உணவாக தான் இருக்க முடியும். இதில் எல்.டி.எல் கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பது இதற்கான காரணமாக இருக்கிறது.

வேர்கடலை

வெண்ணெய் (Peanut butter) வேர்கடலை வெண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. வேர்கடலையில் இருக்கும் அனைத்து நற்குணங்களும் இதில் இருக்கிறது. சர்க்கரை சேர்க்கப்பட்டதை மட்டும் தவிர்க்கவும். ஒருவேளை சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை செய்பவர்கள், கோதுமை பிரெடில் வேர்கடலை வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். சமைக்கும் நேரமும் குறைவு, உடல் நலத்திற்கும் நல்லது.

தேங்காய்

தேங்காய் இதய நலனிற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இதில் இருக்கும் லாரிக் அசிட் (Lauric Acid) எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்க உதவும். அதிலும் இளம் தேங்காய்களை சமையலுக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது.

முட்டை

ஓர் முழு முட்டையில் சராசரியாக 1.5 கிராம் கொழுப்பு இருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்திற்கு நல்லது. காலை உணவுகளில் வேகவைத்த முட்டை சேர்த்துக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள், மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்தலாம்.

09 1436434388 3eightgoodsourcesoffatforyou

Related posts

உங்களுக்கு தெரியுமா உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

nathan

சூப்பரான … வெஜ் பர்கர்

nathan

தெரிஞ்சிக்கங்க…தொப்பையை கரைக்க மட்டுமல்ல சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த காய் சிறந்தது

nathan

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை.! இன்றே செய்து பாருங்கள்..!

nathan

காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பொரிப்பதற்கு எந்த எண்ணெய் சிறந்தது என தெரியுமா? இத படிங்க

nathan

இரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்

nathan

கல்லீரல் பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் ஒரே ஒரு பானம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

sangika