31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான கோதுமை உசிலி

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான சுவையான கோதுமை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான கோதுமை உசிலி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
முழு உளுந்து – அரை கப்
கடலைப்பருப்பு – கால் கப்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

* உளுந்து மற்றும் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேக வைக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, எடுக்கவும்.

* வாணலியில் கடுகு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, அரைத்த பருப்புக் கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் வதக்கி எடுத்தால், சுவையான கோதுமை உசிலி தயார்.

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஒரு சத்தான உணவு இது.

Related posts

சேமியா - கேரட் - பிரெட் ரோல்

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

வெள்ளரி அல்வா

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

nathan

இடியாப்பம் சௌமீன்

nathan

சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் பனீர் குல்சா எப்படி வீட்டில் தயாரிக்கலாம்??

nathan

சிறுதானிய வரிசையில் ஆரோக்கியம் தரும் கம்பு ரொட்டி

nathan