24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
26 1464242887 8 tooth sensitive
ஆரோக்கியம் குறிப்புகள்

திபெத்திய மக்களின் வெள்ளையான மற்றும் வலிமையான பற்களின் ரகசியம் என்ன தெரியுமா?

திபெத்திய மக்கள் மிகவும் பழமையான மருந்துகளைக் கொண்டுள்ளனர். திபெத்திய மருத்துவம் அவர்களது நாகரீக உருவாக்கம் கொண்டு அமைக்கப்பட்டது. மேலும் இந்த திபெத்திய மருத்துவ முறையை உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பின்பற்றி நன்மை பெற்று வருகின்றனர்.

தற்போது நிறைய பேரின் பற்கள் மஞ்சளாகவும், வலிமையின்றியும் இருக்கும். ஆனால் திபெத்திய மக்கள் முதுமையானாலும் அவர்களது பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதற்கு அவர்கள் பின்பற்றி வரும் ஓர் ரகசியமான வழிமுறை தான் காரணம்.

இந்த கட்டுரையில் வெண்மையான மற்றும் வலிமையான பற்களைப் பெற திபெத்திய மக்கள் பின்பற்றும் அந்த முறை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள் தண்ணீர் – 1 கப் உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை முதலில் ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்கவும், பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து, உப்பு நன்கு கரையும் வரை கலக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை தினமும் காலையில், மாலையில் மற்றும் ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும், இந்த உப்பு கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

நன்மை #1 உப்பு கலவையால் வாயைக் கொப்பளிக்கும் போது சொத்தைப் பற்களுக்கு வழிவகுக்கும் நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும்.

நன்மை #2 ஆரம்பத்தில் பற்களின் எனாமல் சிறிது குறைந்தாலும், பின் பற்களின் எனாமல் வலிமையடையக்கூடும்.

நன்மை #3 இந்த திபெத்திய முறையைப் பின்பற்றினால், பற்களில் உள்ள வெடிப்புக்கள் சரிசெய்யப்படும்.

நன்மை #4 இந்த முறையினால் பற்களின் இடுக்குகளில்சிக்கிய உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால் பற்கள் சொத்தையடைவது தடுக்கப்படும்.

எதிர்மறை பக்கவிளைவு ஆரம்பத்தில் இந்த முறையால் அசௌகரியத்தை உணரக்கூடும். ஏனெனில் இந்த உப்பு கலவையானது பற்களை சென்சிடிவ் செய்துவிடும். மேலும் இந்த முறையைப் பின்பற்றுவதால் பற்களில் இருந்து சிறிது எனாமலும் குறையக்கூடும். இருப்பினும் இம்முறையைப் பின்பற்றுவதால் தான் திபெத்திய மக்களின் பற்கள் வெண்மையாகவும், வலிமையுடனும் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

26 1464242887 8 tooth sensitive

Related posts

உங்க ராசிப்படி உங்களின் ஆபத்தான குணம் என்ன தெரியுமா?

nathan

சரக்கடித்து விட்டு சறுக்கிவிழாமல் இருக்க செய்ய வேண்டியவை! தெரிந்துக்கொள்ளலாம்…

nathan

வேப்ப எண்ணெய்யில் இவ்வளவு மருத்துவ பயன்களா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சிறந்த லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

nathan

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

முகத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துகிறீர்களா?

nathan

எவ்வாறு கண்டறிவது குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை?

nathan

பெண்களை அதிகம் தாக்குகின்றது கொலஜென் பிரச்சனை

nathan

உங்களுக்கு தெரியுமா ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!

nathan