25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201608091244079282 stomach ulcer Some treatments at home SECVPF
மருத்துவ குறிப்பு

அல்சர் எனும் வயிற்றுப் புண் – வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்

உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம்.

அல்சர் எனும் வயிற்றுப் புண் – வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்
அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று. உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 10 மில்லியன் மக்கள் இப்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இதில்

* ஆரம்ப நிலையில் உள்ளதனை மருத்துவர்கள் எளிதில் சிகிச்சை அளித்து சரி செய்து விடுவர்.
* அதிக பரிசோதனைகள் தேவைப்படலாம்.
* குணம் பெற சில மாதங்கள் கூட ஆகலாம்.

அதிக ஆசிட் வயிற்றில் சுரப்பது வயிற்றின் பல படிவுகளை அழித்து விடும். புண் தோன்ற இது காரணமாக இருக்கும் ஹெச் பைலோரி என்ற கிருமி பாதிப்பினால் புண் ஏற்படலாம். வலி நிவாரணம் என்பதற்காக அதிக ஆன்லரின் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படலாம். மேல்வயிற்று வலியே இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். ஆசிட் குறைக்க மருந்தும், கிருமி இருந்தால் அதற்கான மருந்தும் தேவைப்படுகின்றது.

19 வயதிலிருந்து 60&க்கும் மேற்பட்டவர்களுக்கு மிக அதிகமாகவும், 3&18 வயதுடையோருக்கு ஓரளவும், 0&3 வயதுடையோருக்கு மிக மிக குறைந்த அளவிலும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது.

* மேல் வயிற்று வலி
* நெஞ்செரிச்சல்
* இரவில் வலி
* உப்பிசம், அஜீரணம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி
* அதிக காற்றுப்போக்கு
* சோர்வு

போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

* யாராவது உங்கள் ஆபிசில் அடிக்கடி உங்களிடம் கோபப்பட்டால் உங்களுக்கு டென்சன் கூடி அல்சர் வந்து விடும்.
* இராத்திரி வெகுநேரம் கண் விழித்து வேலை செய்கிறீர்களா அல்சர்தான்.
* ரொம்ப கவலைப்படாதீங்க. அல்சர்தான்.
அல்சரை பிறருக்கு கொடுப்பதும் சுலபம். அல்சரை நாம் பெறுவதும் சுலபம். அதிக ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் தான் இதற்குக் காரணம்.
வயிற்றில், உணவுப் பாதையில் உருவாகும் இப்புண் மிகுந்த வலியினைத் தரக் கூடியது. சிறுகுடலில் மேல் பகுதியிலும் இப்புண் வரும். பெட்டிக் அல்சர், டயோடிலை அல்சர் என இதனைக் குறிப்பிடுவர்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை ஸ்டிரெஸ், கார, மசாலா உணவுகள், ஆல் கஹால் இவை மட்டுமே வயிற்று குடல் புண்களுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆய்வுகளின் முடிவாக கிருமிகள், சிலவகை மருந்துகள், புகை பிடித்தல் இவையும் புண்களுக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இந்த கிருமிகளைப் பற்றிய ஆய்வுக்காக 1982-ல் இரு டாக்டர்கள் நோபல் பரிசு பெற்றனர்.

புண்கள் ஏற்பட்டு அதில் ஹெச் பைலோரி கிருமி பாதிப்பு இருக்கலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும் ஹெச் பைலோரி கிருமி பாதிப்பு உடையவர்களுக்கெல்லாம் வயிற்று புண் இருப்பதில்லை. சிலருக்கு மற்றவர்களைக் காட்டிலும் வயிற்றில் ஆசிட் சுரப்பது இயற்கையாகவே கூடுதலாக இருப்பதும் வயிற்று புண் ஏற்பட காரணமாகின்றது. இப்படி ஆசிட் சுரப்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் காரணம் ஆகின்றது.

வயிற்று வலிதான் புண்ணின் அறிகுறி. கடுமையான வலி, மேல் வயிற்றில் ஏற்படலாம். சாப்பிட்ட சில மணி நேரங்கள் கழித்து ஏற்படலாம். இரவு அல்லது விடியற்காலை ஏற்படலாம். ஏதாவது சாப்பிடுவதோ, ஆன் டாசிட் எடுத்துக் கொள்வதோ வலி நிவாரணமாக அமையலாம்.

இந்த அறிகுறிகளை ஒதுக்கி மருத்துவ உதவி பெறாமல் இருப்பது புண்ணை பெரிதாக்கி ஓட்டைகளை ஏற்படுத்தி விடும்.
இரத்தக் கசிவு ஏற்பட்டு ஆபத்தாக்கி விடும்.
மேலும் சில அறிகுறிகளும் உண்டு

* பசியின்மை
*அடிக்கடி துடிக்கும் வயிற்று வலி
* அடிக்கடி ஏப்பம்
*அடிக்கடி விக்கல்
* எடை குறைவு
* வாந்தியில் ரத்தம்
* வெளிப்போக்கில் ரத்தம்

ஆகியன ஆகும்.

பல மருத்துவ சோதனைகள் இதனை கண்டறிய உள்ளன. அதற்கேற்ப சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஹெச் பைலோரி கிருமி வாய் எச்சில், உணவு, தண்ணீர் மூலம் பரவக் கூடியது என்பதனை அனைவரும் அறிய வேண்டும். ஆக எப்பொழுதும் கைகளை கழுவி சுத்தமாய் வைத்திருப்பது சிறந்த பாதுகாப்பாக அமையும்.

தொடர்ந்து குணமடை யாவிடில் அறுவை சிகிச்சை மூலம் ‘அல்சர்’ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ப்ளேவ நாய்ட்ஸ் எனப்படுபவை புண்கள் வெகுவாய் ஆற்ற உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது இயற்கையாகவே காய்கறிகள் பழங்களில் நிரம்பி உள்ளன.
அவை

* சோயா பீன்ஸ்
* பருப்பு வகைகள்
* ப்ரோகலி எனும் பச்சை காலி ப்ளவர்
* ஆப்பிள்
* க்ரீன்டீ ஆகும்
* தயிர்
* மோர்
* தேன்
* பூண்டு இவையும் அல்சருக்கு சிறந்தவையாக அமையும்.

தவிர்க்க வேண்டியவை :

* காபி
* புட்டியில் அடைக்கப்பட்ட பானங்கள்
* மிளகாய்
* அதிகம் வறுத்த உணவு
* அதிக மசாலா உணவு

பொதுவில் டாக்டரிடம் செல்லாமல் தானே ஏதோ ஒரு வலி நிவாரண மருந்து அல்லது டாக்டர் பல வருடங்களுக்கு முன்னால் எழுதி கொடுத்த சீட்டை வைத்து மருந்து என வாங்கி சாப்பிடுவர். இது அனைவருக்குமே தீங்கு ஏற்படுத்தலாம். குறிப்பாக அல்சர் நோயாளிகளுக்கு மிக அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

ஆஸ்பரின் கொண்டுள்ள மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்படலாம். எனவே இத்தகு பாதிப்புகள் ஏற்படாது இருக்க மருத்துவ உதவி அவசியம். அல்சர் உருவாவதற்கு முன் வயிற்றுப் போக்கு ஒரு அறிகுறியாக அமையலாம். புண், வயிற்றில் ஓட்டை கூட ஏற்படுத்தக் கூடும். இதில் கிருமிகளின் தாக்குதல் ஏற்படும் பொழுது ஜுரம் ஏற்படக்கூடும்.

சில சமயங்களில் இந்த புண்களில் ரத்தக் கசிவு ஏற்படும் பொழுது அதிக சோர்வும், மூச்சு வாங்குவதும் ஏற்படலாம்.

வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள் :

* முன்பெல்லாம் மசாலா, கார உணவுகள் மிக முக்கியமான காரணமாகக் கருதப்பட்டன. ஆனால் இன்று அவை அல்சர் இருப்பவர்களுக்கு சில தொந்தரவுகளை கொடுக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.

* தியானம் கண்டிப்பாய் ஸ்டிரெஸ் நீக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்டிரெஸ் அல்சருக்கு ஒரு முக்கிய காரணம்.

* வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது ஹெச் பைலோரியால் உருவாகும் அல்சர் வராது தவிர்க்கின்றது.

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் அரைமணி நேர உடற்பயிற்சியும், நன்கு நீர் குடிப்பதும் இப்பிரச்சனையைத் தவிர்க்கும்.

* மிக வேக வேகமாக உண்ணாதீர்கள். கேட்டால் நேரம் இல்லை என்று சொல்வீர்கள். இப்படி உணவை அடைத்து நோய் வரவழைத்துக் கொள் வதினை விட உண்ணாமல் இருப்பது கூட குறைவான தீங்கினைச் செய்யும்.

* அதிகமாக தொண்டை வரை உண்ணாதீர்கள். தீவிர அஜீரணம் அசிடிடி, அல்சர் என கொண்டு வந்து விடும். எப்பொழுதும் அளவாக உண்ணுங்கள்.

* நெஞ்செரிச்சல், தொண்டை வரை ஆசிட் எகிறுதல் போன்றவற்றிற்குக் காரணம் அதிக மசாலா உணவு. இத்துடன் தூங்கச் செல்லும் முன் அதிக கார உணவு, அதிக உணவு, வேகமாக உண்ணும் உணவு, சிகரெட் ஆகியவை ஆகும். இவற்றினை உடனடியாக நிறுத்துங்கள்.

* வயிற்றுப் பிரட்டலுக்கு இஞ்சி சாறுடன் சிறிது தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* சதா சர்வ காலமும் நொறுக்கு தீனி உண்பதை நிறுத்தி விடுங்கள்.201608091244079282 stomach ulcer Some treatments at home SECVPF

Related posts

சூப்பர் டிப்ஸ் உடலில் தேங்கி இருக்கும் சளியை உடனே அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்?

nathan

தொண்டை வலி தீர வழிகள்.

nathan

எச்சரிக்கை! சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

nathan

மனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா?

nathan

பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்!

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…64 சதவீதம் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ‘அந்த’ பிரச்னை வருதாம்…

nathan

வல்லாரையின் மருத்துவச் செயல்பாடுகள்!!

nathan

கருத்த‍டை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்க‍ம் வழக்கம் ஆக்கி கொண்டீர்களா?

sangika