தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் உணவில் தக்காளியை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
பழுத்த தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
* தக்காளியை பொடியாக நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, 1/4 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
* அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வேக வைத்துள்ள தக்காளி விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
* எண்ணெய் பிரியும் வரை கெட்டியானதும் இறக்கவும்.
* இந்த தக்காளி தொக்கு இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.