சட்னி வகைகள்

கேரட் சட்னி

கேரட் சட்னியை இரண்டு முறையில் தயாரிக்கலாம். ஒன்று தேங்காய் சேர்த்து செய்யலாம். மற்றொன்று வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து செய்யலாம். உங்களுக்கு கேரட் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் கேரட் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துருவிய கேரட் – 1 கப்

* தேங்காய் – 1/4 கப்

* சின்ன வெங்காயம் – 4

* பச்சை மிளகாய் – 7-8

* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* புளி – 1 இன்ச்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* எண்ணெய் – 1 டீஸ்பூன்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் சின்ன வெங்காயம், கேரட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* இறுதியாக தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.

குறிப்பு:

* கேரட் சட்னியில் இனிப்பு அதிகம் தெரியக்கூடாது என்றால், பச்சை மிளகாயை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், பாதி பெரிய வெங்காயத்தை பயன்படுத்துங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button