23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201607291311355854 that place infections in women SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

அந்த இடத்தில் பெண்களுக்கு வரும் ஈஸ்ட் தொற்றுகள்

ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.

அந்த இடத்தில் பெண்களுக்கு வரும் ஈஸ்ட் தொற்றுகள்
ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன் நலத்திற்கு முக்கிய அம்சங்களாக விளங்கும் உணர்ச்சி, உடல் மற்றும் ஹார்மோன் காரணிகளை சமாளிக்க முடியும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல் வாழ்க்கை கிடைக்க பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் மிகவும் முக்கியமாகும்.

பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. அதனால் எழப்போகும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியும் தெரிவதில்லை.

ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் என வரும் போது, பெண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக உதவி நாடிட சங்கடப்படாதீர்கள்; அதுவும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான உடலை பேணிட இது உங்களுக்கு கண்டிப்பாக உதவிடும்.

ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் வேகமாக அதிகரிக்கும் பண்பை கொண்டது. அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை நோய் ஏற்படும் அளவிற்கு கூட போய் விடலாம். எரிச்சல், புண் மற்றும் யோனி, யோனிமுகம், ஆசனவாய் சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்ற பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்களே இதற்கான பொதுவான அறிகுறிகளாகும். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, இதனால் வலியும் கூட உண்டாகலாம்.

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஈஸ்ட் தோற்று என்பது எந்த பெண்ணிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.

ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) பாக்டீரியாவால் கூட ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவது மிகவும் அரிதே.. உடலுறவு கொள்ளும் போது ஆணுறைகளை பயன்படுத்தி, HIV பரவாமல் இருக்கவும் வேறு சில உடலுறவு ரீதியான தொற்றுக்கள் பரவாமல் (STI) இருக்கவும் தடுக்கலாம். ஆனாலும் கூட உடலுறவு கொள்ளும் போது, பலரும் எந்த ஒரு பாதுகாப்பையும் உபயோகிப்பதில்லை. ஆனால் உங்களையும், உடலுறவு கொள்ளும் அந்த பெண்ணின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை காத்திடவும், ஆணுறை பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.

ல பெண்கள் 45 முதல் 55 வயதிலான கால கட்டத்தில் இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடைவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தின் போது மனநிலை மாற்றங்கள், அளவுக்கு அதிகமான உணர்ச்சிகள் மற்றும் உணர்திறன் மிகைப்பு ஆகியவற்றை பெண்கள் அனுபவிப்பார்கள்.

ஹாட் ஃப்ளாஷ், வறட்சியாகும் யோனி, பாலியல் ஈடுபாட்டில் குறைவு மற்றும் இரவு நேர புழுக்கங்கள் போன்ற சில அறிகுறிகளையும் பெறுவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு மருந்துகள், சுய பராமரிப்பு பயிற்சிகள் என பல சிகிச்சைகள் முறைகள் தேவைப்படும். இவைகளே பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகளாகும்.201607291311355854 that place infections in women SECVPF

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை-வேலை இரண்டையும் வீட்டிலிருந்தே எப்படி சமாளிக்கிறது…

nathan

அமர்ந்து வேலைசெய்பவர்கள் கட்டாயம் இத படிங்க!

sangika

முட்டி மோதியாவது வென்று காட்டுவார்கள். 5 ஆம் எண் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

nathan

பணம் மூட்டை மூட்டையா கொட்ட ஆமை மோதிரத்தை போடுங்க….

nathan

ஹனிமூன் கொண்டாட பீச்சுக்கு போறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டாள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika

தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது?

nathan

டான்சில்ஸ் பாதிப்பு குழந்தைகளுக்கு வரும்..

nathan