31.1 C
Chennai
Saturday, May 17, 2025
nZBIDFN
முகப் பராமரிப்பு

எப்பவும் அழகா இருக்க

எப்பவும் அழகா இருந்தா நம்ம மதிப்பே தனி தான். கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ போறப்போ நம்ம ஃப்ரண்ட்ஸ் நீ மட்டும் எப்படி அழகா இருக்க எனக் கேட்டா ஒரு கிளாஸ் குளுகோஸ் குடிச்ச மாதிரிதானே இருக்கும். இந்த டிப்ஸ் எல்லாம் காலையில எழுந்ததும் ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் ஆல் டைம் பியூட்டியா வலம் வருவீங்க.

அழகாய் இருக்கனும்னா முதல்ல உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை. நீங்க தன்னம்பிக்கையோட இருந்தாலே ஒரு அழகு உங்க முகத்துல குடிவரும். ஒவ்வொரு காலையும் நீங்க தன்னம்பிக்கையோடுதான் துவங்கனும் என்று முடிவு எடுங்க.

உப்புநீர் : உங்கள் பற்களை விளக்கியவுடன் வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளியுங்கள். இது உங்கள் ஈறு பலம் பெறவும், வாயிலுள்ள மோசமான கிருமிகள் அழியவும் உதவும். இது பற்கள் சொத்தை மற்றும் சிதைவிலிருந்து காப்பாற்றும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். அடுத்தது 2 டம்ளர் நீர் குடிங்க. இது உங்க தோல்ல தங்கியிருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இந்த கழிவுகள்தான் சருமத்தின் மினுமினுப்பை குறைக்கும். ஆகவே அவற்றை வெளியேற்ற வெறும் வயிற்றில் நீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி : அடுத்து நீங்க செய்ய வேண்டியது உடற்பயிற்சி. நிறைய டைம் எடுத்துக்க வேண்டியது இல்ல. குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது நீங்க உடற்பயிற்சி செய்து பாருங்க. உங்கள் ஹார்மோன் எல்லாம் நன்றாக தூண்டப்படும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அப்புறம் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களை ஸ்லிம் பியூட்டின்னு சொல்வது கியாரெண்டி.

சத்துள்ள உணவு : மற்ற இரு வேளைகளைக் காட்டிலும் காலையிலேயே நீங்கள் அதிகமாக உணவு சாப்பிட வேண்டும். அதுவும் புரோட்டின் நிறைந்த உணவுகள் சாப்பிடும் போது, அது நார்சத்துக்களைக் கொண்டுள்ளதால், கொலஸ்ட்ரால் அளவினைக் கட்டுப்படுத்தி, உடலை ஸ்லிமாக வைக்க உதவுகிறது.

க்ரீன் டீ : காலையில் காபி, டீ ஆகியவற்றை விட்டுவிட்டு க்ரீன் டீ குடியுங்கள். அது நிறைய ஆன்டிஆக்ஸிடென்டை கொண்டுள்ளது. உங்களை என்றும் பதினாறாக வைக்க உதவும்.

சன் ஸ்க்ரீன் லோஷன்: காலையில் வெளியே கிளம்புவதற்கு முன் சன் ஸ்க்ரீன் லோஷனை வெயில்படும் இடத்தில் எல்லாம் தடவுங்கள். இது சருமத்தில் புற ஊதாக்கதிர்களை ஊடுருவச் செய்யாது. சரும பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.nZBIDFN

Related posts

மூக்கின் மேல் சொரசொரவென்று உள்ளதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

தழும்பை ஒரே வாரத்தில் போக்க இந்த உப்பு மட்டும் போதும்..!

nathan

உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க நிரந்தர தீர்வு இதை முயன்று பாருங்கள்

nathan

சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்ய…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சிவப்பழகை பெற

nathan

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மேக்கப்பில் உதடுகளை பெரிதாக்க முடியுமா?

nathan