என்னென்ன தேவை?
ஃப்ரெஷ் சோள முத்துக்கள் – 2 கப்,
ரவை – 2 டேபிள்ஸ்பூன்,
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் பொடித்தது – 6,
இஞ்சி (பொடியாக நறுக்கியது) சிறிது,
சீரகம் – சிறிது, உப்பு,
எண்ணெய் – தேவைக்கு, மிளகாய் தூள் – சிறிதுவடைக்கு மேல்
அலங்கரிக்க…
தயிர் – 2 கப்,
சீரகத்தூள் வறுத்து பொடித்தது,
பொடியாக நறுக்கிய மல்லித் தழை – தேவைக்கு,
மிளகாய்த்தூள், இனிப்பு புளிப்பு சட்னி,
பச்சை மல்லி சட்னி, கருப்பு உப்பு-சிறிது,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சோள முத்துகளை மிக்ஸியில் ரவை மாதிரி கெட்டியாக அரைக்கவும். இத்துடன் எண்ணெயைத் தவிர வடைக்கு உள்ளதை வடை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். கலவையை 10 நிமிடம் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைக் கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொண்டு வடையாக வட்டமாக தட்டி மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து ஒரு குழியான தட்டில் அடுக்கவும். பின் 2 கப் புளிக்காத கெட்டியான தயிரை லேசாக கடைந்து சிறிது உப்பு, சர்க்கரை கலந்து வைக்கவும். பரிமாறுவதற்கு முன், இந்த தயிரை அடுக்கி வைத்துள்ள வடைகளின் மேலே ஊற்றவும். அதன் மேல் கருப்பு உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லி, இனிப்பு புளிப்பு சட்னி ஊற்றி பரிமாறவும்.