30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
சிற்றுண்டி வகைகள்

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – முக்கால் கப்
பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்
பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பன்னீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையான பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி தயார்.

Related posts

சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

பொரி உருண்டை

nathan

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika

ஜிலேபி,

nathan

சப்பாத்தி – தால்

nathan

பன்னீர் போண்டா

nathan

அவல் ஆப்பம்

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika