அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

ld751கன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகுதான். ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் இருக்கும். பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும். இவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்!

* முதலில் அதிகாலையில் எழுந்து பழகும் பெண்களுக்கு இயற்கையாக சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் முகத்தில் ஒருவித பொலிவு கிடைக்கும்.

* மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.

* சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.

* எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.

* முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும். அதேபோல் துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.

* சில பெண்களுக்கு முகத்தில் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் முளைக்கும். சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் ரோமம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

Related posts

சந்தனம் ஏன் இவ்ளோ காஸ்ட்லியா இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

அழகழகாய்… அசத்தல் டிப்ஸ்!! அழகு குறிப்புகள்!

nathan

ஐந்து ராசிகளுக்கு அடிக்கும் பேரதிர்ஷ்டம்! உங்க ராசி இருக்குதா?

nathan

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

nathan

ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் இயற்கை எண்ணெய்கள்!!!

nathan

வீட்டை விட்டு வெளியேறிய ஆலியா பட்…!!! திருமணம் முடிந்த பிறகு…

nathan

ஸ்ட்ராபெர்ரியில் நிறைந்திருக்கும் அழகு ரகசியங்கள்!

nathan

இத படிச்சா.. இனிமேல் வாழைப்பழ தோலை தூக்கி போடவே மாட்டீங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும தளர்ச்சி நீக்க இதை வாரத்தில் இரண்டு நாள்கள் செய்தல் போதும்.!

nathan