31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சட்னி வகைகள்

வாழைத்தண்டு சட்னி

தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு – 200கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
தயிர் – 100 மி.லி
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை எடுத்து விடவும்.
* வாழைத்தண்டு, தேங்காய்துருவல், பச்சைமிளகாய் போன்றவைகளை எல்லாம் மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் உப்பு, தயிர் சேருங்கள்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வாழைத்தண்டு கலவையில் கொட்டுங்கள்.
* இதை விரைவாக தயாரித்துவிடலாம். இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அதிக சுவைதரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்தின் தேவைக்கு இதனை சாப்பிடலாம்.

Related posts

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி – பூண்டு சட்னி

nathan

தேங்காய் சட்னி

nathan

சுவையான கேரட் சட்னி

nathan

சுவையான பூண்டு சட்னி

nathan

சூப்பரான கடலைப்பருப்பு தேங்காய் சட்னி

nathan

பச்சை மிளகாய் பச்சடி

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan

சத்து நிறைந்த கம்பு கார சட்னி

nathan

இட்லிக்கு தொட்டுக்க சுவையான பொடி செய்வது எப்படி?

nathan