காலையில் டிபனுக்கு பதிலான இந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
இரும்புச்சத்து நிறைந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்
தேவையான பொருட்கள் :
கேரட் – 100 கிராம்
கோஸ் – 50 கிராம்
திராட்சை – 10,
ஆப்பிள் – 2
வாழைப்பழம் – 1
பைனாப்பிள் – சிறிய துண்டு
மாதுளை முத்துக்கள் – சிறிதளவு,
பப்பாளி – சிறிய துண்டு
தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
* கேரட், கோஸை துருவிக் கொள்ளவும்.
* ஆப்பிள், பைனாப்பிள், பப்பாளி, வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தில் கேரட், கோஸ் துருவல், திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளை முத்துக்கள், பப்பாளித் துண்டுகள் இவை எல்லாவற்றையும் போட்டு, அதனுடன் தேன் சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறவும்.
குறிப்பு: ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சத்து உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகம் கிடைப்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.