201607140706185390 Simple Tips to grow thick eyebrows SECVPF
முகப் பராமரிப்பு

புருவம் அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்

சிலருக்கு புருவத்தில் முடி இருக்காது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி வந்தால் ஒருமாதத்தில் புருவம் அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

புருவம் அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்
புருவம் அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் விட்டமின் ஈ ஆகியவைகள் இருந்தால் போதும். பொதுவாக தலையில் முடி வளர்ச்சிக்கும், புருவத்தில் முடி வளர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. தலையில் ஏற்படும் பொடுகு கூட, புருவங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ போஷாக்கினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது. இப்படி மூன்றுமே ஒரு கலவையாக உங்கள் புருவத்தில் செயல் புரிந்து, எப்படி புருவ வளர்ச்சியை தராமல் போகும். எப்படி செய்வது இந்த எண்ணெய் சீரத்தை என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
விட்டமின் ஈ ஆயில் – அரை டீஸ்பூன்
விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்
மஸ்காரா பிரஷ் – 1

மேலே சொன்ன எண்ணெய்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலின் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஸ்காரா பிரஷில் அந்த எண்ணெயை குழைத்து, பிரஷ்ஷினால், புருவத்தில் பூசுங்கள். தினமும் இரவில் பூசி வாருங்கள். இந்த எண்ணெயை இமைகளுக்கும் பூசலாம். நீங்கள் பிரஷினால் தீட்டும் அதே வாகில் முடி வளர்ந்து, புருவம் அடர்த்தியாய் காண்பிக்கும். ஒரு மாதத்தில் அழகான புருவம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருப்பது உறுதி.201607140706185390 Simple Tips to grow thick eyebrows SECVPF

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நைட் தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க…

nathan

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

sangika

உங்க முகம் மேடு பள்ளமா அசிங்கமா இருக்குதா?

nathan

முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆச்சரியப்பட வைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்!!!

nathan

கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையா? பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்…..

nathan

முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

nathan

முகம் பளபளப்பாக மாற வேண்டுமா?

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika