sl3736
சூப் வகைகள்

பாதாம் தேங்காய்ப்பால் கிரீம் சூப்

என்னென்ன தேவை?

நறுக்கிய கேரட் 1 கப்,
பாதாம் 6,
வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் 1,
பாலாடை(கிரீம்) 1/4 கப்,
காய்ச்சிய பால் 1/4 கப்,
தேங்காய்ப்பால் 1/2 கப்,
உப்பு சுவைக்கேற்ப,
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்.

அலங்கரிக்க.

துருவிய பாதாம் சிறிது,
நறுக்கிய கொத்தமல்லி சிறிது.

எப்படிச் செய்வது?

கேரட்டை நன்கு கழுவி, தோலுரித்து, நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பிரஷர் பானில், மிதமான தீயில் வெண்ணெயை இளக்கி, பாதாம், வெங்காயம், கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரை வேக விடவும். சற்றே ஆறியவுடன், பால் சேர்த்து அரைத்து, வடிகட்டி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, மீண்டும் அடுப்பில் ஏற்றவும். சிறிய தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். கிரீம், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து இறக்கவும். துருவிய பாதாம், கொத்தமல்லி தூவி அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.sl3736

Related posts

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

பானி பூரி சூப்

nathan

சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

சுவையான மீன் சூப் இவ்வாறு செய்து சாப்பிடுங்கள்…..

sangika

லென்ட்டில் - லீக்ஸ் சூப்

nathan

காளான் சூப்

nathan

நூடுல்ஸ் சூப்

nathan

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

கேரட்  - இஞ்சி சூப்

nathan