201606271421169930 How to make Paruppu Urundai Kulambu SECVPF
சைவம்

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

பருப்பு உருண்டை குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இப்போது பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

உருண்டைக்கு :

கடலை பருப்பு – 1 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு

குழம்புக்கு :

சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
தேங்காய் துருவல் – 1/2 கப்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டி ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
புளி – நெல்லிக்காய் அளவு

செய்முறை :

* சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலை பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்(நெய்சாக அரைக்க கூடாது இல்லை என்றால் உருண்டை இருகி விடும்).

* பெரிய வெங்காயத்தை(பாதி) பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.

* நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.

* அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (சாம்பார் தூளுக்கு பதில் மிளகாயும், மல்லி தூளும் சேர்க்கலாம்) குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

* கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

* இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும். 201606271421169930 How to make Paruppu Urundai Kulambu SECVPF

Related posts

காலிஃப்ளவர் 65

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்

nathan

வெண்டை மொச்சை மண்டி

nathan

புளியானம்! வாசகிகள் கைமணம்!!

nathan

சுவையான உருளைக்கிழங்கு கிச்சடி

nathan

சுரைக்காய் கூட்டு

nathan

காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

nathan

கத்திரிக்காய் பிரியாணி

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan