27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
201606270819151363 Reducing body wheat more kali SECVPF
ஆரோக்கிய உணவு

உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர்க்கூழை மதிய வேளைகளில் செய்து சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 2 கப்
கோதுமை மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
மோர் – 2 கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

செய்முறை:

* அரிசி மாவு, கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.

* கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு கரைத்து வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும்.

* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

* உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.201606270819151363 Reducing body wheat more kali SECVPF

Related posts

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா? அப்ப இத படிங்க.

nathan

பொன்னாங்கண்ணி கீரையின் பொன்னான ஆரோக்கிய நன்மைகள்!

nathan

கீரை தி கிரேட்: வெந்தயக்கீரை

nathan

கோதுமையை விட சிறந்த வரகு அரிசி

nathan

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

nathan

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள் !!

nathan

கம்பு உணவு நோய்களுக்கு நிவாரணி! உணவே மருந்து !!

nathan