25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
mithirannnnnn
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் வெப்பம் அதிகரிக்கிறதா? சிறுநீரைப் பார்த்துக் கண்டுபிடியுங்கள்

உலகளாவிய ரீதியில் புயல், மழை, வெள்ளம், சூறாவளி என்று மழை சார்ந்த பாதிப்புகளால் பலியாவோரை விட, அதீத சூரிய வெப்பத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

90 பாகை ஃபரனைட்டுக்கு மேலான வெப்பம் ஓரிரு நாட்களுக்கு மேல் நீடிக்குமேயானால், நமது உள்ளுறுப்புக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இதைத் தடுக்க வேண்டும் என்றால், கடும் வெப்ப காலத்தின்போது அதிகளவு நீரை அருந்துவதே ஒரே வழி. சிலர், வெப்ப காலத்தில் தாகம் எடுக்கும் வரை தண்ணீர் அருந்த மாட்டார்கள். அது தவறு. தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் தண்ணீர் அருந்துவது அவசியம்.

இன்னும் சிலர், தண்ணீருக்குப் பதிலாக கோப்பியோ, தேநீரோ, குளிர்பானங்களோ அருந்துவர். இதுவும் தவறானது. இந்த பானங்களில் அடங்கியிருக்கும் வஸ்துக்களால், உடலின் நீர்த்தன்மை இன்னும் பாதிக்கப்படுமே தவிர பயன்தராது.

இவ்வாறான வெப்ப காலத்தின்போது, உங்கள் உடல் உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றனவா என்று கண்டறிய நான்கு வழிமுறைகள் உண்டு. அவை,

சிறுநீரை கவனியுங்கள்:
ஆரோக்கியமான நிலையில் உங்களது சிறுநீர் தெளிவானதாகவோ அல்லது மெல்லிய மஞ்சள் நிறமாகவோ வெளியேறலாம். மஞ்சளின் கடுமை கூடக் கூட, உங்கள் உடலில் நீர்ச்சத்துக் குறைகிறது என்றறியலாம். எனவே, சிறுநீர் கடும் மஞ்சள் நிறமாக இருந்தால், வழமையிலும் அதிகமாக நீர் அருந்துங்கள்.

கிள்ளிப் பாருங்கள்:
உங்கள் உடலின் செல்களில் நீர்த்தன்மை தீர்ந்துவிட்டால் அதைத் தோலின் வழியாக அறிந்துகொள்ளலாம். உங்கள் கையின் பின்புறத்தில் உள்ள தோலைக் கிள்ளி இழுத்து, ஒரு ஐந்து நொடிகள் வரை வைத்திருந்தபின் மீண்டும் விடுங்கள். அது இயல்பு நிலைக்குத் திரும்ப ஐந்து நொடிகள் ஆகிறது என்றால், உங்கள் உடலில் போதிய நீர்த்தன்மை இல்லை என்று அர்த்தம்.

சுவாசத்தில் துர்நாற்றம்:
வாயில் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தாலும் உடல் போதியளவு நீர்த்தன்மை இல்லாதிருக்கிறது என்று அர்த்தம். வெப்ப காலத்தின்போது அதிகளவு வியர்வை வழியாக உங்களது உடலின் நீர்த்தன்மை வெளியேறிவிடுவதால், போதியளவு உமிழ்நீரை உடலால் உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.

இதனால் வாய் உலர்ந்துவிடுவதால், பக்டீரியாக்கள் விரைவாக வளர்வதோடு, வாயில் துர்நாற்றமும் ஏற்படுகிறது.

மின்விசிறிப் பரிசோதனை:
புதிய ஆதாரங்களின் அடிப்படையில், உங்கள் உடல் 95 பாகை ஃபரனைட் அளவுக்கு மேல் வெப்பமாகும்போது, ஒரு மின் விசிறியின் கீழ் அமர்ந்து பாருங்கள்.

சுற்றுகின்ற அந்த மின் விசிறி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகரிக்கச் செய்வதோடு, வியர்வை வெளியேறாமலும் தடுத்து விடும். இம்மாதிரியான சூழலில், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் தஞ்சம் புகுவதோ அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதோ உங்கள் உடலைப் பாதுகாக்கும்.mithirannnnnn

Related posts

வாட்ஸ் அப் மூலம் பெண்களை தொடரும் ஆபத்து

nathan

தோல் நிறத்தைப் பாதுகாக்கும் திராட்சை…

nathan

மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க தரமான சானிட்டரி பேட் உபயோகியுங்க

nathan

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

கிட்னி பிரச்சினை தடுக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் உங்கள முழுமனசோட காதலிப்பாங்களாம் தெரியுமா?

nathan

அடிக்கடி டர்..புர்-ன்னு விடுறீங்களா? அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதையும் காணலாம்

nathan

இதோ எளிய நிவாரணம்! வயிற்று எரிச்சலை போக்க சில ஈஸி டிப்ஸ்!

nathan

தெரிஞ்சிக்கங்க… மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

nathan