உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்
தேவையான பொருள்கள் :
முட்டைகோஸ் – கால் கிலோ
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம்- அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை :
* கொத்தமல்லி தழை, முட்டைகோஸை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க பின் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன்பின் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதித்ததும் அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.
மருத்துவக்குணங்கள் :
முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்.
மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.
குறிப்பு :
காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.