25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201606221059306963 Chettinad fish curry without coconut add SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

டயட்டில் இருப்பவர்கள் தேங்காய் சேர்க்காமல் மீன் குழம்பு செய்து சாப்பிடலாம். இப்போது தேங்காய் சேர்க்காமல் மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு
தேவையான பொருட்கள் :

வஞ்சிர‌ மீன் – 250 கிராம்
வெந்தயம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சின்னவெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

குழம்பு மசாலா செய்ய‌ :

மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4 (குண்டு)
சீரகம் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
மிளகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* சின்ன வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

* மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

* புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் குழம்பு மசாலா செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில்போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக மசிந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளி கரைசல் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

* கடைசியாக மீனை போட்டு அடுப்பை குறைந்த தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி பரிமாறவும்.

* மீன் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது. இதை தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
201606221059306963 Chettinad fish curry without coconut add SECVPF

Related posts

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

nathan

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

nathan

செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை விளக்கம்

nathan

செட்டிநாடு சிக்கன் கிரேவி

nathan

சுவையான செட்டிநாடு பூண்டு குழம்பு

nathan

செட்டிநாட்டு பட்டாணி மசாலாப் பொரியல்

nathan

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

nathan

வெந்தய கார குழம்பு

nathan

செட்டி நாட்டு புளியோதரை

nathan