28.5 C
Chennai
Sunday, May 18, 2025
201606131139002873 Spicy egg curry recipe description SECVPF
அசைவ வகைகள்

காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்

பல மசாலா பொருட்களை கொண்டு செய்யும் இந்த முட்டை குழம்பு சுவையாக இருக்கும். இந்த முட்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

வேக வைத்த முட்டை – 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
காஷ்மீரி வர மிளகாய் – 5
ஜாதிக்காய் – 1
கசகசா – 1/2 டீஸ்பூன்
தனியா – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பட்டை – 2
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
தக்காளி – 3
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

* வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தனியா, ஜாதிக்காய், காஷ்மீரி வர மிளகாய், பட்டை, ஏலக்காய், கிரம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

* பின் அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து மிதமான தீயில் தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

* பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

* பின்பு அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டை குழம்பு ரெடி!201606131139002873 Spicy egg curry recipe description SECVPF

Related posts

சூப்பரான அவதி ஸ்டைல் மட்டன் கபாப்

nathan

மட்டன் கபாப் : செய்முறைகளுடன்…!​

nathan

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

nathan

சூப்பரான பைனாப்பிள் தாய் சிக்கன்

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!

nathan

மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா

nathan

நண்டு மசாலா,tamil samayal in tamil language non veg

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan