28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
GREcQzS
மருத்துவ குறிப்பு

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் பண்ணைகீரை

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, மாதவிலக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளை தீர்க்கும் பண்ணை கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உருவத்தை உடையது. பண்ணை கீரை ரத்தக்கசிவை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

பண்ணை கீரையின் பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்படுதல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். பண்ணை கீரையின் 4 பூக்களை துண்டுகளாகி, இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைபோக்கு சரியாகிறது. கருப்பையில் ஏற்படும் புண்கள் ஆறும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவிலான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

பண்ணை கீரையை பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகுப் பொடி, நல்லெண்ணெய், உப்பு. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணய் விடவும். எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம் சேர்க்கவும். சிறிது பூண்டு தட்டிபோடவும். இதனுடன் பண்னை கீரை, மிளகுப்பொடி, உப்பு சேர்க்கவும். பின்னர், தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதை குடித்துவர கை,கால் வலி குணமாகும். கால்சியம், இரும்பு சத்து குறைபாடு நீங்கும். வயிற்றுகோளாறுக்கு மருந்தாகிறது. அதிக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. அதிக நன்மைகளை கொண்ட பண்ணை கீரையானது, ரத்த கசிவை கட்டுப்படுத்த கூடியது. இதில் கால்சியம், புரதச்சத்து உள்ளது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. இந்த கீரையை அளவாக சாப்பிட வேண்டும். பண்ணை கீரையை பயன்படுத்தி முகப்பருவை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

பண்ணை கீரையை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து முகப்பருவுக்கு மேல் போட்டால் பருக்கள் மறையும். கட்டிகளுக்கு மேல்பூச்சாக போடுவதன் மூலம் கட்டிகள் சீல் பிடிக்காமல் குணமாகும். பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வெள்ளைப்போக்கு, மாதவிலக்கு பிரச்னைகளுக்கு பண்ணை கீரை மருந்தாகிறது. உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. பண்ணை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கற்கள் கரையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.GREcQzS

Related posts

குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்

nathan

இரைப்பை குடல் அழற்சிக்கான சில எளிய கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! வயிற்றின் கொழுப்பை குறைக்க உதவும் சில வியக்கத்தக்க வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

ஜலதோஷம், தலைவலிக்கு சிறந்த மருந்து!

sangika

10 நாட்களில் தேமல் முற்றாக மறைந்துவிட இத செய்யுங்கள்!…

sangika

பெண்களின் திறமையை தடுக்கும் பயமும்.. கூச்சமும்..

nathan

பற்களின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

nathan

உங்களுக்கு நாள்பட்ட ஆறாத புண்கள் சிறுநீரக கற்களை கரைக்க அரை டம்ளர் பீர்க்கங்காய் சாறு குடிங்க!!!

nathan

ஹார்மோன் மாற்றங்கள் உஷ்ணத்தால் பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சனைகள்

nathan