31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

உங்கள் நாக்கு இந்த நிறத்தில் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான். அதற்கு உதவும் வகையில் நாக்கில் ‘சுவையுணர்வு ஏற்பிகள்’ ஏராளமாக உள்ளன. இவை இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன.

நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா, வைரஸ், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப்போது நாக்கில் புண்கள் வரும்.

 

நம்முடைய நாக்கின் நிறத்தை வைத்தே நம் உடலில் உள்ள பிரச்சனை என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்பது தெரியுமா?

நாக்கு அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் உடலில் ஏதேனும் தொற்றுநோய் மற்றும் அலர்ஜி இருப்பதாக அர்த்தம்.

மஞ்சள் நிறத்தில் நாக்கு இருந்தால் வயிறு அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும். மஞ்சள் காமாலையாகவும் இருக்கலாம். காபி நிறப் படிவு போல் நாக்கு இருந்தால் நுரையீரல் பாதிப்பு உண்டாக வாய்பபுண்டு.

நாக்கு ரோஸ் நிறத்தில் இருந்தால் அவர்களுடைய உடல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று பொருள். இளம்சிவப்பு நிறத்தில் இருந்தால் இதயம் மற்றும் ரத்த சம்பந்தமான நோய் இருக்கலாம்.

வெளிர் வெள்ளை நிறத்தில் நாக்கு இருந்தால் உடல் நீர் வற்றி நுண் கிருமிகளால் காய்ச்சல் உண்டாகும் என்று பொருள். சிமெண்ட் நிறத்தில் நாக்கு இருந்தால் செரிமானம் மற்றும் மூல நோய் இருக்கும்.

நாக்கில் வெள்ளை நிறத்தில் சீஸ் போன்று படிவம் படர்ந்திருந்தால் வாயில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த வாய் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக் குறைகிறது என்பதற்கான அறிகுறி.

Related posts

நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்…!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? சிசேரியன் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan

தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்!

nathan

குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

nathan

அடேங்கப்பா! உடல் நலத்தை காக்கும் செம்பருத்தி பூ; எப்படி தெரியுமா…?

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?

nathan

முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

உங்களுக்கு கண் அடிக்கடி அரிக்குதா? சூப்பரா பலன் தரும்!!

nathan