27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
04 1465021112 6 bhindi juice7
ஆரோக்கிய உணவு

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள். சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

அதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது. வெண்டைக்காயை எப்படி திரவ வடிவில் எடுப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

அது வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

சரி, இப்போது தினமும் வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நன்மை #1

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

நன்மை #2

சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

நன்மை #3

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

நன்மை #4

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

நன்மை #5

வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

நன்மை #6

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

நன்மை #7

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.
04 1465021112 6 bhindi juice7

Related posts

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெஜிடபிள் ஜூஸ்!

nathan

உங்களுக்கு இயற்கை உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா? இத ட்ரை பண்ணி பாருங்க,…

nathan

சுவையான சத்து மாவு கஞ்சி

nathan

மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சுவர் டிப்ஸ் !மூட்டு வலியை போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்!

nathan

நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

nathan

நாம் வேண்டாம் என தூக்கி போடும் சோள நாரில் இவ்வளவு நன்மையா..?அப்ப இத படிங்க!

nathan

புளிப்பாக சாப்பிடலாமா?

nathan