என்னென்ன தேவை?
பூசணிக்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப்,
தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1 (சிறியது),
கடுகு – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
தயிர் – 1 கப்,
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
சீரகம், பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைக்கும் போது சிறிது தயிர் சேர்த்து கொள்ளலாம். நறுக்கிய பூசணிக்காயுடன் அரைத்த கலவையை சேர்த்து உப்பு, தயிர் போட்டு கலக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கலவையில் சேர்த்து பரிமாறவும். சாம்பார் சாதம் அல்லது வத்த குழம்பிற்கு ஏற்ற பச்சடி இது.