முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்க, எப்படி உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மூலம் நம் உடல் எடை அதிகரித்ததோ, அதே உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களின் மூலமே அதிகரித்த உடல் எடையைக் குறைக்கலாம்.
ஆம், எப்போதும் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கும் இயற்கை வழியை நாடினால், அதன் பலன் வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைத்திருக்கும். உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ வழிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வந்தால், உடம்பை எளிதில் குறைக்கலாம்.
சோம்பு தண்ணீர்
தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம்.
அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு
தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.
சுரைக்காய்
வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு உட்கொண்டு வாருங்கள்.
பப்பாளி காய்
பப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை குறையும்.
எலுமிச்சை சாறு
தினமும் டீ குடிக்கும் போது, அதில் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.
வெங்காயம், பூண்டு
கட்டாயம் சமையலில் வெங்காயம், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவற்றை உணவில் சற்று அதிகமாக சேர்க்கும் போது, அதனால் உடல் எடை குறையும்.
அருகம்புல் ஜூஸ்
அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மந்தாரை வேர்
மந்தாரை வேரை 1 கப் நீரில் போட்டு காய்ச்சி, நீர் பாதியாக குறைந்ததும், வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை பாதியாக குறையும்.
வாழைத்தண்டு ஜூஸ்
வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.
நடைப்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். அதிலும் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.