24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

3வெட்ட வெட்ட மீண்டும் துளிர்விடும் வாழை மரத்தின் பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை. இதில் வாழைப்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புசத்து அதிகப்படியாக உட்கிரகிக்கப்படுவதால் ரத்த சோகை என்பது தலை தூக்காது. துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும்.

இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம் மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை இவைகளால் வாயு சீற்றம் அதிகமாகி வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்புண்கள் ஆற வாழைப்பூவை குறைந்தது மாதத்துக்கு 5 நாட்கள் சமைத்து உண்ணலாம். மூல நோய்கள், ரத்தம் வெளியேறுதல், உள் மூல – வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண், வாய்துர்நாற்றம் இவைகள் எல்லாம் நிவாரணமாக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டது வாழைப்பூ. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்னைகளை களைந்தெறியும் தன்மை கொண்டது.

நம் மாவட்டத்தில் விதவிதமான வாழைகள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் மொந்தன், பாளையங்கோட்டை வகைகளின் வாழைப்பூ உண்பது சால சிறந்ததாகும். வாழைப்பூ வடை, கட்லெட், பக்கோடா என பலகாரங்களாகவும் செய்து உண்பதும் உகந்ததே.

Related posts

தெரிஞ்சிக்கங்க…இந்த ‘ஒரு பொருள்’ இருந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக போக்கலாம் தெரியுமா?

nathan

நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்து tamil healthy food

nathan

கமலா ஆரஞ்சு பழத்தில் எத்தனை சத்துக்கள் உள்ளன தெரியுமா!

nathan

முயன்று பாருங்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

சுவையான ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ்

nathan

உடல் நலன் காக்கும் குடம் புளி

nathan

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

nathan

டயட்டில் இருப்போருக்கான… ஓட்ஸ் உப்புமா

nathan

கல்சியம் சத்து குறைபாடா? அப்ப இத படிங்க!

nathan