மருத்துவ குறிப்பு

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?

தற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?
இப்போதெல்லாம் 40 வயதை தாண்டிவிட்டாலே பல்வேறு நோய்களுடன் முட்டுவலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த பாதிப்பில் இருந்து `ஸ்லிம்’ ஆனவர்கள் பெரும்பாலும் தப்பித்துவிடும் அதேநேரத்தில், உடல் பருமன் கொண்டவர்கள் இதனால் படாதபாடு படுகிறார்கள்.

எலும்பு தேய்மானம் அடைவதால்தான் முட்டுவலி ஏற்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்தான் எலும்பு தேய்மான (ஆஸ்ட்ரியோ போரசிஸ்) நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். அடுத்த 40 ஆண்டுகளில் 30 கோடி பேரை இந்த நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று.

கால்சிய குறைபாடுதான்! கூடவே தவறான உணவுப்பழக்க வழக்கமும்! அத்துடன், மது, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக முட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரும்.

இந்த அறிகுறிகள் ஒருவருக்கு காணப்பட்டால் முட்டு மாற்று சிகிச்சை நிபுணர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
இப்போதெல்லாம் நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே ரசாயனம் கலக்கப்பட்டுவிட்டது. இதுவும் எலும்பு தேய்மானம் ஏற்பட மற்றொரு காரணமாகிவிடுகிறது.

எலும்பு தேய்மான அறிகுறி உள்ளவர்கள் கால்சியம் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை தினமும் சாப்பிடுவது நல்லது.201605281305524868 Osteoporosis is caused due to what SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button