31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை!

இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை!
** திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும்.

** குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.

** 20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்.

** அசைவ உணவு உண்ணாதவர்கள்; அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.

** தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தருவது திராட்சை.

** காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி இவை தரும் தீராத தொல்லைகள் தீரும்.

** மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது நல்ல பலனளிக்கும்.

** குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவ பயன் நிறைந்தது திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து கொடுத்தால் பலன் தெரியும்

Related posts

பெண்களே வெளிநாடு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

ஜலதோஷம், தலைவலிக்கு சிறந்த மருந்து!

sangika

தும்மலால் மிகுந்த அவஸ்தைப்படுகிறீர்களா? அதை உடனடியாக நிறுத்த இதோ சில வழிகள்!!!

nathan

தற்கொலைக்கு தூண்டுமா மன அழுத்த மருந்துகள் ? -இலவச CD பெற வேண்டுமா ?

nathan

பெண்களே மாத பட்ஜெட்டை சிறப்பாக பராமரிக்க 5 டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க… பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

nathan

பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்

nathan

தாங்க முடியாத முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட சில டிப்ஸ்…!

nathan

குழந்தைப் பருவத்தில் பருவமடைதலும் சிக்கல்களும்…தெரிஞ்சிக்கங்க…

nathan