அனைவரது வீட்டிலும் எறும்புகள், பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை அழையா விருந்தாளிகள் போல் வந்து தங்கியிருக்கும். அப்படி தங்கியிருப்பது மட்டுமின்றி, அவ்வப்போது நம்மை பயமுறுத்தவும் செய்யும்.
உங்களுக்கு கரப்பான் பூச்சி என்றால் பயமா? உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி அதிகமா இருக்கா? அதை எப்படி விரட்டுவது என்று தெரியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா
சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தூவினால், கரப்பான் பூச்சி அந்த இனிப்பை உட்கொண்டு, இறந்துவிடும்.
பிரியாணி இலை
பிரியாணி இலையை பொடி செய்து, கரப்பான் பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் தூவிவிட்டால், அதன் நறுமணத்தால் கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.
கிராம்பு
கரப்பான் பூச்சி வரும் இடத்தில் கிராம்பை வைத்தால், அதன் நறுமணத்திற்கு கரப்பான் பூச்சி வராது. முக்கியமாக அவ்வப்போது கிராம்பை மாற்ற வேண்டும்.
போரிக் ஆசிட
் கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைத்து, அதை கரப்பான் பூச்சி சாப்பிட்டால், இறந்துவிடும்.
மிளகு, வெங்காயம் மற்றும் பூண்டு
மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட்டை ஒன்றாக கலந்து, தண்ணீர் ஊற்றி ஒரு நீர்மம் தயாரித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தெளிக்க வேண்டும்.
போராக்ஸ் பவுடர்
பொதுவாக பூச்சிகளை அழிக்க போராக்ஸ் பவுடர் பயன்படுத்துவோம். அதனை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் அதிகம் தூவினால், கரப்பான் பூச்சி வராமல் தடுக்கலாம்.