தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
கொத்தமல்லி – 1 கட்டு
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
பட்டை, லவங்கம் – 1
ஏலக்காய் – 1
முந்திரி, உப்பு, நெய் – தேவையான அளவு
செய்முறை:
பச்சை கொத்தமல்லியை சுத்தம் செய்து அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ப்ரஷர் பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிறகு அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்கு வதங்கியப்பின் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடவும்.
தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ‘ ஸ்டீம்’ வந்ததும் ‘வெய்ட்’ போடவும் அடுப்பை ‘சிம்மில்’ 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.
நிறம் மற்றும் சுவை நிறைந்த மணமுள்ள கொத்தமல்லி சாதம் தயார்.