31.1 C
Chennai
Monday, May 20, 2024
201610081418487985 kadai paneer SECVPF
சைவம்

குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்

இதுவரை நீங்கள் ஹோட்டலில் சுவைத்த கடாய் பன்னீரை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்
தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் –

செய்முறை:

* முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், சூடான கடாய் பன்னீர் ரெடி.201610081418487985 kadai paneer SECVPF

Related posts

சிம்பிள் ஆலு மசாலா

nathan

சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு

nathan

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

nathan

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

வெந்தயக் குழம்பு/ vendhaya kuzhambu

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

வாழைக்காய் பொரியல்

nathan

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan

கடலை புளிக்குழம்பு

nathan